திருப்பூரில் பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் - போலீசார் குவிப்பு!

திருப்பூர் அடுத்த தொட்டி மன்னரை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள தொட்டி மன்னரை பகுதியில் முறைகேடாக இயங்கி வந்த பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு தொட்டி மன்னரை அருகேயுள்ள ரோஜா நகர் பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் குடியிருப்புகளுக்கு நடுவே கடந்த 7 ஆண்டுகளாக முனியசாமி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகள் அரைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.



இந்த பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குழந்தைகள், பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பொதுமக்கள் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலையை ஆய்வு செய்த பொழுது பிளாஸ்டிக் தொழிற்சாலை முறைகேடாகவும் எந்த அனுமதியும் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து முறைகேடாக இயங்கி வந்த பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை இயக்க கூடாது எனவும் முறையாக அனுமதி பெற்ற பின்னர் தான் இயக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொழிற்சாலையை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...