17வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - பொள்ளாச்சி இளைஞர் மீது சிறுமி புகார்!

பொள்ளாச்சியில் கடையில் வேலைப்பார்த்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கடை உரிமையாளரின் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன்.

அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் 27 வயது மகனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம்.

இந்த காதல் விவகாரம் எங்களது பெற்றோருக்குத் தெரிய வரவே எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி நாங்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினோம். பின்னர் என்னை எனது காதலர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றார்.

கணவன்-மனைவி என கூறி பஸ் நிலையம் அருகே உள்ள வீட்டில் குடியிருந்தோம். பின்னர் அந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தோம். நாங்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். அப்போது எனது காதலன் என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தார்.

கடந்த சில நாட்களாக எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக எனது காதலர் என்னிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று 5 மாதம் என்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, ஏமாற்றி சென்ற எனது காதலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை போலீசார் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து திருமண ஆசை காட்டி சிறுமியை ஏமாற்றிய அவரது காதலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதால் அவர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...