ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் ராஜகோபுரம் முன்பு 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை, ஆழியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மயானத்தில் மாசாணி அம்மன் கோயில் கருவறையில் அம்மன் சயன ரூபத்தில் இருப்பது போன்று மயான கொட்டகையில் அம்மனின் திருவுருவம் அமைக்கப்பட்டது.



பின்பு, அம்மனின் காலடியில் அசுரனின் கோர உருவமும் அம்மனின் ஒரு கையில் கபாலம், மற்றொரு கையில் எலும்பு துண்டு வைத்திருக்க அம்மனின் திருவுருவத்திற்கு பட்டுப்புடவை போர்த்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.



பக்தர்கள் முன்னிலையில் அம்மனின் திருவுருவத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



அம்மன் அருளாளி அருள் வந்து ஆடியபடி அம்மனின், மணல் திருவுருவத்தை கலைத்தபடியே அம்மன் சிரசின் மீது உள்ள சூலாயத்தை கையில் எடுத்துக் கொண்டு, அம்பிகையின் வலது கையில் உள்ள எலும்பு துண்டை தனது வாயில் கவ்வியபடி ஆக்ரோஷமாக காட்சி அளித்தார்.



இந்த காட்சியை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் கண்டு தரிசனம் செய்தனர். இறுதியில் அம்மனின் திரு உருவத்திலிருந்து மண்ணை எடுத்து கலசத்தில் சேகரித்து எடுத்துச் சென்று கோயிலில் உள்ள கருவறையில் வைக்கப்பட்டது.

திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு வரும் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...