கோவை - சத்தியமங்கலம் சாலையில் சென்றவர்களுக்கு பாலியல் சீண்டல் விடுத்து பணம் கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகள் கைது

சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்றவர்களிடம் பாலியல் சீண்டல் விடுத்து பணம் கேட்டு தொந்தரவு செய்த 2 திருநங்கைகளை கைது செய்து ஜாமீனில் விடுவித்த காவல்துறை, ரோந்து பணியை தீவிரப்படுத்த முடிவு.


கோவை: கோவை - சத்தியமங்கலம் சாலையில் சென்றவர்களிடம் பாலியல் ரீதியாக சீண்டி பணம் கேட்டு தொந்தரவு செய்த 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து செல்லும் பொழுது கோவை - சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் அருகே திருநங்கைகள் சிலரை வழிமறித்து தொந்தரவு செய்துள்ளனர்.

இதனைப் இரவு ரோந்து பணியின்போது பார்த்த கோவை மாநகர துணை ஆணையாளர் சந்திஸ், நடத்திய விசாரணையில், நள்ளிரவில் திருநங்கைகள் சாலையில் வரும் நபர்களை வழிமறித்து அவர்களை பாலியல் ரீதியாக அணுக வற்புறுத்தியது தெரியவந்தது.

மேலும் நள்ளிரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் என பலரையும் வழிமறித்து உடலுறவு வைத்துக் கொள்ள அழைப்பதும், அவர்களிடமிருந்து பணம் பொருட்களை கேட்டு தொந்தரவு செய்வதும் தொடர்ந்து நடந்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதன் காரணமாக சிட்டி போலீசார் அவ்வப்போது திருநங்கைகளை எச்சரித்து அனுப்பினாலும், போலீசாரின் எச்சரிக்கையினை அப்போதைக்கு ஏற்றுக் கொள்ளும் திருநங்கைகள், பின்னர் மீண்டும் இதே போன்று செயலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

திருநங்கைகள் என்பதனால் பொதுமக்கள் போலீஸிடம் புகார் தரவும் தயங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் பாலியல் ரீதியாக உடலுறவுக்கு அழைத்து பணம் கேட்டு வற்புறுத்திய கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த திருநங்கை ருத்னால் (22), மற்றும் பொன்னியபுரம் பகுதியைச் சேர்ந்த ரோகினி (18) ஆகியோரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இனி வரும் காலங்களில் இது போன்று நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் காந்திபுரம், 100 அடி ரோடு, ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் திருநங்கைகள் இதுபோன்ற தொந்தரவு சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் நாள்தோறும் இனி நள்ளிரவில் ரோந்து செல்ல திட்டமிட்டிருக்கின்றனர். திருநங்கைகளின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்கும் விதமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...