கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சரவணம்பட்டி அருகே வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே தை பூசத்துக்காக கோயிலுக்கு சென்றவர்கள் வீட்டில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டி அருகேயுள்ள காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மகேந்திரன் (62) - ரஞ்சனா (46) தம்பதி. 2 மகள்களுடன் வசித்து வந்த இவர்கள், நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு தைப்பூசத்திற்காக மருதமலைக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் மகேந்திரன் வீட்டின் அக்கம்பக்கத்தினர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீடு திறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், மருதமலைக்கு பாதயாத்திரை சென்ற மகேந்திரன் தனது குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சரவணம்பட்டி போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...