உடுமலையில் பாரம்பரியம் மாறாம தைப்பூசக் கொண்டாட்டம் - கிராம மக்கள் வழிபாடு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாரம்பரியம் மாறாமல் கிராம மக்கள் தைப்பூச விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.



கணபதிபாளையம் உச்சிமாகாளியம்மன் கோவில் முன்பு பாரம்பரியம் மாறாமல் நடைபெற்ற இந்த விழாவுக்கு பிரபாகர், சவுந்திரராஜ், சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சில் அரிமா சண்முகம், வர்ஷினி இளங்கோவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் கோவை பம்பை இசைக் குழுவினரின் பம்பை இசையுடன், வாளவாடி பயிற்சிப்பள்ளியின் சிலம்பம், களரி மற்றும் கோவை காவடி குழுவினரின் காவடி ஆட்டம் நடைபெற்றது.



அத்துடன் கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் முதல் குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்டு கலக்கிய வட்டக்கும்மி, வள்ளிக்கும்மி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதி நிகழ்ச்சியாக அன்னமார் கதை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...