வால்பாறை வனச்சரக அலுவலகம் அருகே உலா வந்த கரடிகள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கோவை வால்பாறை வனச்சரக அலுவலக வளாகத்தில் குட்டியுடன் உலா வந்த கரடிகளை, அங்கிருந்த ஊழியர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக அலுவலகம் அருகே கரடிகள் உலா வந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், சிறுத்தை, கரடி, மான் மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



வாட்டர் பால்ஸ் எஸ்டேட் அருகேயுள்ள வால்பாறை வனச்சரக அலுவலகம் முன்பு இன்று காலை குட்டியுடன் இருந்த கரடி ஒன்று உலா வந்தது. அப்போது அங்கிருந்த உழியர்கள் கரடிகளை செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிறிது நேரத்திற்கு பின்பு கரடிகள் வனப்பகுதிக்குள் சென்றன. இந்நிலையில், ஊழியர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...