எங்களுக்கு ஒளி பிறந்திருக்கின்றது -அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

எங்களுக்கு ஒளி பிறந்திருக்கின்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து.


ஈரோடு: ஈரோட்டில் ஒளிரும் ஈரோடு அமைப்பினருடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டிருக்கின்றனர். கட்சித் தொண்டர்களை சந்திப்பது, ஆதரவு அமைப்புகளை சந்திப்பது, வாக்காளர்களைச் சந்திப்பது என ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் பிரச்சாரம் சென்றாலும், மறுபுறம் ஒபிஎஸ், இபிஎஸ் அதிமுக தலைமை கைப்பற்றுவது குறித்த விவகாரம் பெரும் விவாதத்தினை எழுப்பின. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்து எடப்பாடி அணிக்கும், பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே சிக்கல் நீடித்தன.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தேர்தல் களத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் அணி அறிவித்திருக்கின்றது.

இதனால் எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகின்றார்.



இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒளிரும் ஈரோடு அமைப்பினருடன் கலந்துரையாடினார்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எங்களுக்கு ஒளி பிறந்துள்ளது, ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...