பல்லடம் அருகே சாலையில் குழாய் உடைந்து பீறிட்டு வெளியேறிய தண்ணீர் - பரபரப்பு

பல்லடம் அடுத்த அவிநாசி - மங்கலம் சாலையில் 4ஆம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் குழாய் உடைந்து 15 அடி உயரத்திற்கு மேல் பீறிட்டு தண்ணீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடி வீணாகியது. குழாய் வால்வில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக உடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் திடீரென 15 அடி உயரத்திற்கு மேல் பீறிட்டு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமுகை அருகே சுமைதாங்கி பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அன்னூர், அவிநாசி, மோப்பிரிப்பாளையம், பல்லடம் வழியாக திருப்பூர் வரை நான்காம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் குழாய் செல்கிறது.



இந்நிலையில் அவிநாசி - மங்கலம் சாலையில் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பீறிட்டு தண்ணீர் வெளியேறியது. பிரதான குழாய் உடைந்ததால் 25 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறிய நிலையில், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதனிடையே குழாய் வால்வில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும், தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு உடைந்த குழாயினை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...