நீலகிரி மலைப்பாதையில் காட்டுயானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் தொந்தரவு அளிக்கும் வீடியோ வைரல்!

நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் மின்வாரிய குடியிருப்பு அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அச்சுறுத்தும் வகையில், வாகனத்தை முன்னும் பின்னுமாக இயக்கி புகைப்படம் எடுத்து தொந்தரவு அளிக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கோவை செல்லும் கெத்தை மலைபாதையில் 48 கொண்டை ஊசி வளைவுகளை உள்ளன. அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் இந்த மலைப்பாதையை உள்ளூர் மக்கள் கோவை சென்று வரவும், கேரளா மாநில சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரவும் பயன்படுத்தி வருகின்றனர். வனப்பகுதிக்குள் இந்த சாலை இருப்பதால் காட்டு யானைகள் அடிக்கடி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது வழக்கமாக உள்ளது.



இந்நிலையில், கெத்தை மின்வாரிய குடியிருப்பை ஒட்டி உள்ள மாரியம்மன் கோவில் அருகே காட்டுயானைக்கூட்டம் ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானை கூட்டம் சாலை ஓரத்திற்கு வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சில வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை கூட்டத்தின் அருகில் வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்தனர்.



இதனைக் கண்டு ஆத்திரமடைந்த யானை ஒன்று துரத்தி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் வாகனத்தை முன்னும் பின்னுமாக இயக்கி புகைப்படம் எடுத்தும் தொந்தரவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவோர்மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...