கோவையில் பழுது பார்க்க வந்த காரில் இருந்த அரிய வகை பறக்கும் பாம்பு - வனத்துறையிடம் ஒப்படைப்பு!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டருக்கு பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விடப்பட்ட காரில் இருந்து அரிய வகை பாம்பான பறக்கும் பாம்பு மீட்கப்பட்டு பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே பழுது பார்க்க வந்த காரில் இருந்து அரியவகை பறக்கும் பாம்பு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் கார் சர்வீஸ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சர்வீஸ் சென்டருக்கு கார் ஒன்று பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழியர்கள் அந்த காரில் பழுது பார்க்க சென்ற போது அதில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பாம்புகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ரதீஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த ரதீஷ், காரில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். பிடிபட்ட பாம்பு பறக்கும் பாம்பு என அறியப்படும் விஷத்தன்மையுள்ள பாம்பாகும்.

இந்த பாம்புகள் பச்சை நிறத்தில் கருப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குறுக்கு கோடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இதன் விஷத்தன்மை மனிதர்களை பாதிக்காது என்றும், பறவைகள் மற்றும் சிறு பூச்சியினங்களை உண்பதற்கு மட்டுமே இதன் விஷம் பயன்படும் எனவும் கூறப்படுகிறது.

இவ்வகை பாம்புகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகளவில் காணப்படும். உயரமான கிளையிலிருந்து கீழே குதிக்கும் திறமையும், ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் திறமையும் கொண்டதன் காரணமாகவே இவ்வகை பாம்புகள் பறக்கும் பாம்பு என அழைக்கப்படுகிறது.

காரின் உரிமையாளர் ஆனைக்கட்டி வனப்பகுதி அருகே சுற்றுலா சென்று திரும்பிய நிலையில், மரத்தில் இருந்து காரில் தவறி விழுந்திருக்கலாம் என பாம்புகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிடிபட்ட பறக்கும் பாம்பு மாவட்ட வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...