உடுமலை அருகே தைப்பூச நிறைவு நாள் விழா - நள்ளிரவு வரை வள்ளி கும்மியாட்டம் ஆடி சிறப்பு வழிபாடு!

தைப்பூச திருவிழா நிறைவு நாளையொட்டி, உடுமலை அருகேயுள்ள சடையகவுண்டன் புதூர் பால விநாயகர் கோவிலில் ஆண்கள், பெண்கள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நள்ளிரவு வரை வள்ளி கும்மியாட்டம் ஆடி உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: உடுமலை அருகே தைப்பூச திருவிழா நிறைவு நாளை ஆண்கள், பெண்கள் என பலரும் பங்கேற்று வள்ளி கும்மியாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.

தைப்பொங்கலுக்கு பிறகு கிராமங்களில் தைப்பூசம் என்பது சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். முருகப் பெருமானை வழிபடும் தைப்பூசத்தின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது.



இதனை முன்னிட்டு உடுமலை அருகே அந்தியூர் ஊராட்சி சடையகவுண்டன் புதூர் ஜீவா நகரில் பால விநாயகர் கோவிலில் உள்ள முருகனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதனிடையே கோவில் முன் தேர்கோலமிட்ட பக்தர்கள், முருகன் சிலையை சிறப்பாக அலங்கரித்து மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



முருகப்பெருமானின் கதைகளை 40 பாடல்களாக பாடி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. குறிப்பாக இதில் வள்ளியின் பிறப்பு திருமணம் குறித்த பாடல்கள் முக்கிய பங்கு வகித்தது. பாடுபவர்கள் மையமாக நிற்க சுற்றிலும் பெண்கள், ஆண்கள் ஆடும் கும்மியாட்டம் வள்ளி கும்மியாட்டம் எனப்படுகிறது.

குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் இணைந்து பாரம்பரிய வாத்தியத்துடன் நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த கும்மியாட்டத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...