திருப்பூரில் மன அழுத்தத்தை குறைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி - அரசு மருத்துவமனை நோயாளிகள் பங்கேற்பு!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், 'நலமுடன் நோயாளிகள் வாழ நாலு வரிகள்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: இந்திய மருந்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், ‘நலமுடன் நோயாளிகள் வாழ நாலு வரிகள்’எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்திய மருத்துவ சங்க திருப்பூர் கிளை தலைவர் சரோஜா நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். டாக்டர் ரவிச்சந்திரன், டாக்டர் அருள்ஜோதி, சங்க செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.



‘ஒண்டர்புல் நம்பிகை’மையம் சார்பில், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் மருத்துவமனையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், நோயாளிகளுக்கு, தங்களுக்கு இருக்கும் நோய் குறித்த பயத்தை எப்படி போக்குவது என்பது தொடர்பான அறிவுரைகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.



இதில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏராளமான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவாக மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...