கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்க தலைவராக 'அன்னலெட்சுமி' ராமசாமி தேர்வு!

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக அன்னலெட்சுமி ஓட்டலின் நிர்வாக இயக்குநர் ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.



கோவை: கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியும் கடந்த செவ்வாய்க்கிழமை (07.02.2023) நடைபெற்றது.



கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜோன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஹோட்டல் அன்னலெட்சுமியின் நிர்வாக இயக்குனர் K.A.ராமசாமி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



அதேபோல், ஹரி பவனம் ஹோட்டல்களின் நிர்வாக இயக்குனர் பாலச்சந்தர் ராஜு செயலராகவும் சங்க உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கோவிந்தராஜன் பொருளாளராக தொடர்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

சங்கத்தின் துணை தலைவர்களாக வஞ்சிமுத்து (பூமராங் ஐஸ் கிரீம்), மணிகண்டன் (ஸ்ரீ ஆனந்தாஸ்), காமராஜ் (பொள்ளாச்சி) மற்றும் கிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

மேலும், இணை செயலர்களாக ஜெகன் தாமோதரசாமி (ஸ்ரீ அன்னபூர்ணா), டேவிட் (கொக்கரக்கோ), ராஜன் (வளர்மதி ஹோட்டல்ஸ்), வெங்கடேஷ் (ஸ்ரீ ஆனந்தாஸ்) மற்றும் சுந்தரராகவன் (பொள்ளாச்சி) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் 2023ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் பற்றி புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் K.A.ராமசாமி மற்றும் செயலர் பாலச்சந்தர் ராஜு கூறியதாவது,

வரும் இரண்டு ஆண்டுகளில் சங்கத்தின் உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது.

அத்துடன் ஆண்டு முழுவதும் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் அடங்கிய நாட்காட்டியை ஏற்படுத்தவும், ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

சங்கம் சார்பில் மாரத்தான் போட்டிகள், ரத்த தான முகாம்கள், கிரிக்கெட் டீம் உருவாக்கி போட்டிகள் மற்றும் வரவிருக்கும் ஆண்டில் உணவு திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சங்கத்திற்கான மேம்படுத்தப்பட்ட புது இணையதள பக்கத்தை உருவாக்கவும், அதன் மூலம் உறுப்பினர்கள் தகவல்கள், சேர்க்கை மற்றும் சந்தா கட்டுதல் போன்ற பணிகளை எளிதாக்கப்பட உள்ளது.

அதேபோல் 2 ஆண்டுகளில் சங்கத்திற்கான புது அலுவலகத்தை கட்டவும் திட்டமிட்டுள்ளோம்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...