தாராபுரத்தில் தனியார் கல்லூரி சார்பில் மரம் நடும் விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பிஷப் தார்ப் கல்லூரி மற்றும் டாஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் பல்வேறு வகையிலான 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தாராபுரத்தில் உள்ள பிஷப் தார்ப் கல்லூரியில், டாஸ் அறக்கட்டளை மற்றும் பிஷப் தார்ப் கல்லூரி இணைந்து கல்லூரி வளாகத்தில், முதல்வர் முனைவர் விக்டர் லாசரஸ் தலைமையில், மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் குமார் மற்றும் சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஹெலின் பிரேமாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் இதில் டாஸ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாய் பிரசாந்த், பொதுச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரம் நடுதல் முக்கியத்துவம் குறித்தும் மரம் நன்மையையும், சுற்றுச்சூழலையும் எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை மாணவ மாணவிகளிடையே எடுத்துரைத்தனர்.



திருச்சி டாஸ் அறக்கட்டளை குழுவினர் பிஷப் தார்ப் கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு 500க்கு மேற்பட்ட பல்வேறு விதமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.



இதில் மகாகனி, நாவல், எழிலைப்பாலை, நீர் மருது, மகிழும், கொன்றை, வாகை, அத்தி, நகாமரம், வாதாம், செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் பிரேம்நாத், சமூக சேவகர் டாக்டர் சிவசங்கர் ஜெகதீஷ் பாபு, நாட்டு நலப்பணி அலுவலர் ராஜேஷ், நளினி ஜெயக்குமாரி, ஏஞ்சலின் பிரபா மற்றும் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...