வால்பாறை அருகே பழங்குடியின கிராமத்தில் சார் ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம்

கோவை வால்பாறை அருகேயுள்ள பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சாலை, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வன சரகத்தில் சுமார் 8 பழங்குடியின மக்கள் வாழும் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இதேபோல் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் வால்பாறை வனச்சரகத்தில் பழங்குடியின கிராமத்திலும் மற்றும் மானாம்பள்ளி வன சரகத்தில் சின்கோனா பழங்குடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இதில், பயிற்சி சார் ஆட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர் ஜெகதீஷ் மற்றும் பழங்குடியினர் வட்டாசியர் தணிகைவேல், வனத்துறை அதிகாரி மணிகண்டன் வெங்கடேஷ் மற்றும் 21 வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் ஆதிவாசி மக்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை மக்கள் சார் ஆட்சியரிடம் தெரிவித்தனர். வீடுகளுக்கு மின்சார வசதி வேண்டும். சாலை வசதி வேண்டும். குடிதண்ணீர் வசதி வேண்டும்.



சிங்கோனா பகுதியில் வனப்பகுதியில் சேகரிக்கும் தேன், மிளகு, காப்பி, ஏலக்காய் போன்ற பயிர்களை விற்பனை செய்ய விற்பனை கூடம் வேண்டும். குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் போன்றவை வேண்டும் என்று சார் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.



இதுபோன்ற பழங்குடி கிராமத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்த மனுவை சார் ஆட்சியரிடம் வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...