கோவை கவுண்டம்பாளையத்தில் குட்கா விற்பனை - மளிகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதை பொருட்களை விற்பனை செய்த மளிகைக்கடை உரிமையாளர்கள் தேவராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை சிலர் மளிகைக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திரவடிவேல் தலைமையிலான குழு, கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மளிகைக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய குட்கா, பான்மசாலா போதை பொருட்களை அங்குள்ள தேவராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோரின் மளிகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

இதுதொடர்பாக மளிகைக்கடை உரிமையாளர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...