பல்லடத்தில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து அரிவாள் முனையில் பணம் கொள்ளை - தொடர் கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பெரும்பாலி பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான ஜெயமணி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு ஜெயமணி தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டதால் கதவை திறந்து பார்த்துள்ளார்.



அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் கையில் அரிவாளுடன் ஜெயமணியை மிரட்டி பீரோ சாவியை வாங்கி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது பேரனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஜெயமணி புகார் அளித்துள்ளார்.



இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் அரிவாலுடன் வீட்டுக்குள் புகுந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பல்லடம் பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...