நீலகிரியில் அரிய டிரவ்ட் வகை மீன்குஞ்சு பொறிப்பகம் நவீனமயம் - ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு!

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் உள்ள மீன்வளத்துறைக்கு சொந்தமான பண்ணை சீரமைப்பதற்கு தமிழக அரசு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் நேரில் ஆய்வு செய்து பண்ணையை சீரமைப்பது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. 1907 -ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மீன் பண்ணையில், அழிவின் விளிம்பிஸ் உள்ள அரிய வகை டிரவ்ட் மீன்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் உற்பத்தி செய்து வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஆண்டு முழுவதும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வரும் இந்த பண்ணை, கடந்த 2019 ஆம் ஆண்டு பெய்த கனமழை வெள்ளப்பெருக்கில் அதிக சேதம் அடைந்தது.

கடந்த 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்படாததால் இந்த மீன் பண்ணை பராமரிப்பின்றி காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போதைய தமிழக அரசு அந்த பண்ணையை சீரமைத்து நவீனமயமாக்க முடிவு செய்து, அதற்கென ரூ. 2.5 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது.



இந்த நிதியின்மூலம் தடுப்பணைகள் கட்டுவது, குஞ்சு பொறிப்பகத்தை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.



முதற்கட்டமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோக்கர்நாத் அரசு மீன் பண்ணையிலிருந்து 20 ஆயிரம் ட்ரவுட் மீன் குஞ்சுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.



இதனை, மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் நேரில் ஆய்வு செய்து பண்ணையை சீரமைப்பது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...