குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் பெதப்பம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்குத் துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் சாதிக் பாட்சா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர பாண்டியன் பேசியதாவது, கிராமப்புறங்களில் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதார பணிகளை மேற்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான ஊதியம் குடிமங்கலம் ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இதைத் தவிர்த்து சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இந்தக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம், திவ்யா, முருகன், முருகானந்தம், செல்வராஜ் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...