வால்பாறையில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரல் - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்டம் வால்பாறையில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பாதுகாப்பாக நடமாட வேண்டுமென பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

வனப்பகுதியிலிருந்து இங்கு நுழையும் சிறுத்தைகள், வீடுகளில் வளர்க்கும் நாய், கோழி, ஆடு, பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி கொன்று தூக்கிச்செல்வது தொடர்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இந்த நிலையில், வால்பாறை காமராஜர் நகர் சாலை குடியிருப்பு பகுதியில் இருந்து இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையில் கடந்து சென்றது. இதனை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர்.



சாலையைக் கடக்கும் அந்தச் சிறுத்தை வனப்பகுதிக்குள் செல்வதுபோல் பதிவாகியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையடுத்து, புதுத்தோட்ட பகுதியில் இருந்து, வால்பாறைக்கு வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வரும்போது கவனமாக இருக்க வேண்டுமென வனத்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும், வனவிலங்குகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...