உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் - தென்னை விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

பேச்சுவார்த்தையில், கூலி விவகாரத்தில் பழைய நிலை தொடர்வது, உள்ளூர் தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

உடுமலை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மத்தியில் வடமாநில தொழிலாளர் வருகை, கூலி சம்பந்தமாக பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தது.



அதன் தொடர்ச்சியாக சில சச்சரவுகள் தொடர்ந்த நிலையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணஉடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.



இதில் வருவாய் கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை துணைக்காவல் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல், தளி காவல்நிலைய ஆய்வாளர் ராஜாகண்ணன் முன்னிலையில் இந்த அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில், விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆ.பாலதண்டபாணி, ஏ.ராஜகோபால், S.பரமசிவம், சிங்காரம் உள்ளிட்டோரும், வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்குமார், அருண், கார்த்திகேயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மேலும், சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் ஜெகதீஷ், ரங்கநாதன், தர்மன், ஜெயக்குமார், மகுடீஸ்வரன் தென்னை பேரவை சார்பில் சக்தி, தர்மர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பல்வேறு சுமூக முடிவுகள் எட்டப்பட்டன. அவை,

1) கடந்த நாட்களில் கூலி விவகாரத்தில் என்ன நிலை இருந்ததோ அதனை அப்படியே தொடர்வது... தேங்காய் விலை சீரமைந்த பின் கூலி இறுதி செய்வது குறித்து பேசிக்கொள்வது.

2) சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாத வண்ணம் அனைவரும் நடந்து கொள்வது.

3) வியாபாரிகள்உள்ளூர் தொழிலாளிகளை தங்கள் வேலைக்கு கூடுதலாக பயன்படுத்திக்கொள்வது.

4) சமூக ஊடகங்கள் மூலமாக தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் வதந்திகளை பரப்பக்கூடாது.

இவ்வாறான மேற்கண்ட முடிவுகளை அனைவரும் அமுல்படுத்துவது என தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் இடையேயான பேச்சு வார்த்தையில் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...