திருப்பூர் உடுமலையில் கோடைக்கு முன்பே தர்பூசணி விற்பனை அமோகம்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சீசன் துவங்குவதற்கு முன்னதாகவே, வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தர்பூசணி பழ விற்பனை அமோகமாக நடந்து வருவதாக வியாபாரிகள் கருத்து.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சீசனுக்கு முன்னதாகவே, தர்பூசணி விற்பனை களைகட்டி வருகிறது.

உடுமலை சுற்று வட்டார பகுதிகளுக்கு, கோடை காலத்தை சமாளிக்க, திண்டிவனம் உட்பட பகுதிகளில் இருந்து, தர்பூசணி விற்பனைக்காக, கொண்டு வரப்படுகிறது. இச்சீசனை இலக்கு வைத்து, உடுமலை பகுதியிலும், தர்பூசணி சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தை இலக்காக வைத்து, நுாற்றுக்கணக்கான ஏக்கரில், தர்பூசணி நடவு செய்யப்பட்டு, தொடர் மழையால், சில இடங்களில் பாதிப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிப்பு இல்லாத பகுதிகளில், அறுவடை இன்னமும் துவங்காத நிலையில், வழக்கத்தை விட முன்னதாகவே பிற மாநிலங்களில் இருந்து தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது.



அதன்படி, ஆந்திராவில், இருந்து கிலோ, 20 ரூபாய் முதல் தர்பூசணி கொள்முதல் செய்யப்பட்டு, உடுமலை நகர பகுதியில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருவதால், வெளிமாநில தர்பூசணி விற்பனையும், களைகட்டி வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...