கோவையில் திருநங்கைகள் சமையல் கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற உணவுத் திருவிழா

தமிழகத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்த சமூக நலத்துறை சார்பில் உணவு திருவிழா நடத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு திருநங்கைகள் கோரிக்கை.



கோவை: பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக உணவுத் திருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்ட திருநங்கைகள் சமையல் கலைஞர்கள் சார்பில் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக உணவுத் திருவிழா நடைபெற்றது.



பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு உணவு திருவிழாவை தொடங்கி வைத்து சிறந்த திருநங்கை சமையல் கலைஞர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் கோப்பைகளை வழங்கினர்.



கோவை பொள்ளாச்சியில் உள்ள ஏராளமான திருநங்கை சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு 20 வகையான சைவம் மற்றும் அசைவ உணவை தயாரித்தனர் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான உணவுகளை ரசித்தும் ருசித்து உண்டதோடு பார்சல்கள் பெற்று சென்றனர்.



கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் பெரும்பாலான திருநங்கைகள் சமையல் தொழில் செய்து தொழில் முனைவோர்களாகச் செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து தொழிலில் ஆர்வம் காட்டி வருகின்றனர் தமிழக அரசு திருநங்கைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திருநங்கைகளை ஊக்குவிக்க சமூக நலத்துறை உதவியுடன் திருநங்கைகள் உணவு திருவிழாவை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...