கோவை குண்டுவெடிப்பு தினம் - மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

கோவையில் 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.



கோவை: கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 2050 மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் நாளை பிப்ரவரி 14 ஆம் தேதியையொட்டி கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



குறிப்பாக ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடைமைகளும் ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.



மேலும் வெளியே உட்கார்ந்து இருக்கும் அனைத்து பயணிகளின் உடைமைகளும் மெட்டல் டிடெக்டர் மூலமாக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, அசம்பாவித சம்பவங்களை தடுக்க 2 டிஐஜி, 4 போலீஸ் சூப்பிரண்டு, 18 உதவி ஆணையர், 225 கமெண்டோ போலீசார் உள்ளிட்ட 3000 பேர் கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...