வால்பாறையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில், யாருக்கும் அதிஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வால்பாறைக்கு வந்து சேர்ந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 40 க்கும் மேற்பட்ட அரசு பேருந்து இயங்கி வருகிறது.

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், பழனி, சாலகுடி, மன்னார்குடி போன்ற பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படுகிறது.

இன்று காலை வெள்ளைமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் 40 க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் பயணிகள் இருந்தனர்.

அதேபோல், வால்பாறையில் இருந்து சின்கோனா எஸ்டேட் பகுதிக்கும் ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் பள்ளி ஆசிரியர்கள் எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பயணிகள் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர்.



கூலாங்கள் ஆற்று பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு சாலையின் ஒரு பகுதியில் மண்ணை தோண்டி எடுத்துப் போடப்பட்டிருந்தது.



இந்நிலையில், அரசு பேருந்துகள் எதிர் எதிரே வரும்போது விலகி செல்ல வழி இல்லாமல் போனதால், இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



அதில் ஒரு பழைய பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தால், பேருந்தில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



இந்த விபத்தால், பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து வால்பாறை வந்து சேர்ந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...