காதலர் தினத்தில் சாதி, மதத்தை கடந்து காதல் திருமணம் - கோவை பெரியார் படிப்பகத்தில் புது தம்பதிக்கு வாழ்த்து!

கோவை பெரியார் படிப்பகத்தில் காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காதல் ஜோடி பெரியார் வழியில் திருமணம் செய்து கொண்டனர்.



கோவை: கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் காதலர் தினத்தை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி-14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.



இதில் இந்திய மாணவர் சங்கத்தினர் கேக் வெட்டி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.



அப்போது, ஜாதி மதங்களை கடந்து வரும் காதலை போற்றிடுவோம் எனவும் ஜாதி மதங்களை தகர்த்திடுவோம் எனவும் முழக்கங்களை எழுப்பி இதய வடிவிலான பலூன்களை பறக்க விட்டனர்.



மேலும் காதலர் தினமான இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் இந்து மதத்தை சேர்ந்த கௌதம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ரீனா ஜெனிட்டா ஆகியோர் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.



இதுகுறித்து பேசிய அந்த தம்பதி, மத ரீதியாக பல்வேறு இடர்பாடுகள் தங்களுக்கு வந்ததாகவும், அதனைத் தாண்டி தங்களுக்குள் இருந்த புரிதலால் திருமணம் செய்து கொண்டுள்ளோம்.

தற்போதைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் காதலை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் ஜாதி, மதங்களை புரியாமல் சிலர் பின்பற்றி வருகின்றனர்.



அதனை தகர்க்கும் விதமாகவே நாங்கள் எவ்வித ஜாதி மதங்களையும் சாராமல் பெரியார் வழியில் திருமணம் செய்து கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...