கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது. தரைத் தொட்டி, லிப்ட் பிட், டிரம் ஆகிய இடங்களில் அதிக கொசுப்புழுக்கள் இருந்தன. தூய்மைப்பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS அவர்களின் அறிவுறுத்தலின்படி, Coimbatore மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், இன்று (24.06.2026) கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 8-வது வார்டில் மாஹாராஜா விஸ்தரிப்பு பகுதியான நேரு நகரில் மாநகராட்சி சுகாதார குழுவினரால் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கட்டிடத்தின் உட்பகுதியில் தரைத் தொட்டி, லிப்ட் பிட், டிரம், குடம் ஆகிய இடங்களில் அதிப்படியான கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட உடனேயே தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன்படி ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீர் நிரப்பி வைப்பது, டயர்கள், கப்புகள், கொட்டாங்குச்சிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் முட்டையிட்டு அதிலிருந்து உருவாகும் கொசுக்கள் டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன.

டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஸ் கொசு சாக்கடை நீரில் வளராது, தூய தண்ணீரில் மட்டுமே வளரும். இக்கொசு பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். வீட்டின் உட்புறங்களில் உள்ள பிரிட்ஜ் டிரேயில் இருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசு முட்டையிட்டு, கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.

வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்திடவும், கட்டிடத்தின் அருகாமையில் தேங்காய் ஓடுகள், உரல்கள், உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள், உபயோகமற்ற டயர்கள் ஆகியவற்றை அகற்றிடவும் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

செடி வளர்க்கும் தொட்டிகளில் நீர் தேங்கி நிற்காமல் பராமரித்திடவும், வீட்டில் சமையல் மற்றும் குடிநீருக்கு பிடித்து வைக்கும் தண்ணீரின் கலன்களை மூடிவைத்து பராமரித்திடவும், அதனை அடிக்கடி மாற்றிடவும் வேண்டும்.

வீடுகளில் வளர்க்கப்படும் மணி பிளாண்ட் செடிகளில் தண்ணீர் ஊற்றி வளர விடுகிறோம். அந்த தண்ணீரில் இந்த கொசு வளரும் வாய்ப்புள்ளது. ஏர்கூலர் தண்ணீரில் இந்த கொசு வளரும் வாய்ப்பு உள்ளதால், ஏர்கூலரை அடிக்கடி துடைத்து தண்ணீரை மாற்ற வேண்டும்.

கட்டிடத்தின் மேல்தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கி நிற்காமல் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் கலன்களை திறந்த வெளியில் போடப்பட்டு இருந்தால், அந்த நிறுவனங்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக பராமரித்து, டெங்கு காய்ச்சல் உருவாவதை தடுப்பதில் விழிப்புணர்வுடன் பங்காற்றிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...