கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் கவிதை போட்டி: வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு ரொக்கப் பரிசுகள்!

கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


கோவை: கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவையில் உள்ள அருவி வாசகர் வட்டம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.02.2023) மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான தமிழ் கவிதைப் போட்டி நடைபெற்றது. இந்த கவிதை போட்டியில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில், சி.எம்.எஸ் கல்வியியல் கல்லூரி மாணவர் பிரகாஷ்ராஜ்-க்கு முதல் பரிசாக ரூ.2,500 வழங்கப்பட்டது. அதேபோல் தென்காசி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவி கிருஷ்ணம்மாளுக்கு 2ஆம் பரிசாக ரூ.1,500 வழங்கப்பட்டது.

மேலும், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ரிதன்யா சாருமதிக்கு மூன்றாம் பரிசாக ரூ.500, அதே பி.எஸ்.ஜி கல்லூரியை சேர்ந்த சுந்தருக்கு 4ஆவது பரிசாக ரூ.250 வழங்கப்பட்டது.



தொடர்ந்து இந்த கவிதை போட்டியில் மேடையில் தங்கள் கவிதைகளை வாசித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞர் முனைவர் மு. நாகராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், சமகால சமூக-அரசியல் பிரச்சினைகளை வாசகர்களுக்கு தெளிவாகப் புரிந்துகொள்ளும் கவிதைகள் மட்டுமே தலைமுறைகளை கடந்து செல்லும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அருவி வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் அனைவரையும் வரவேற்றார், இந்த விழாவை சக்தி ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...