தாராபுரத்தில் முதலையைப் பிடிக்கும் முயற்சி தோல்வி - தேடுதல் வேட்டை தொடரும் என வனத்துறை அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய அமராவதி ஆற்று பாலம் அருகே நடமாடிவரும் ராட்சத முதலையை பிடிக்கும் வனத்துறையின் முதல் கட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. தேடுதல் வேட்டை மீண்டும் தொடரும் என வனத்துறை அறிவிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீத்தக்காடு மற்றும் தாளக்கரை, மணலூர், அமராவதி தடுப்பணை உள்ளிட்ட நான்கு இடங்களில் முதலை இருந்து வந்த நிலையில் முதலையை பிடிப்பதற்காக வனச்சரகர் தனபால் மற்றும் வனக்காப்பாளர் பாபு வாசர் அன்னபூரணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.



நேற்று காலை 10 மணியளவில் அமராவதி புது ஆற்று பாலத்திற்கு முதலையை பிடிப்பதற்காக வந்தனர். அப்போது, வலையை வீசி முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இரண்டும் முறை முதலை வலையை அறுத்துக்கொண்டு தப்பி சென்றது. இதனால், முதல் நாள் முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், முதலையை பிடிக்கும் பணி தொடரும் என வன சரகர் தனபால் தெரிவித்தார்.



மேலும், முதலை நடமாட்டம் பற்றிய தகவல் அறிந்த தாராபுரம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் மற்றும் தாராபுரம் நகராட்சி ஆணையாளர் ராமர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடமான புதிய அமராவதி ஆற்றுப்பாலத்திற்கு வந்து பார்வையிட்டனர்.



இதுகுறித்து காங்கேயம் வனச்சரகர் தனபால் கூறுகையில், சீதக்காடு உள்ளிட்ட நான்கு இடங்களில் முதலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாளக்கரை என்ற இடத்தில் பார்த்த முதலை மட்டுமே உருவ அளவில் பெரிய முதலை. தாளக்கரை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதாலும் முதலையை பிடிக்க முடியவில்லை.

தற்போது அமராவதி புதிய ஆற்றுப்பாலம் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ஆற்றில் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் வனதுறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் முதலையை பிடிப்பதற்காக வலையை வீசி பிடிக்க முயன்றனர். இருப்பினும், முதலை இரண்டு முறை தப்பி சென்றது. இதனால் முதலில் பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. மீண்டும் முதலையை பிடிக்கும் பணி தொடரும்.

2ம் கட்ட தேடுதல் வேட்டையில் வேறு வலைகள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த முதலை பெரிய அளவில் ஆக்ரோஷம் இல்லாமல் இருப்பதாகவும் வனச்சரகர் தனபால் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...