தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹா சிவராத்திரி விழா - பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்!

கோவை மட்டுமின்றி சென்னை, திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல், வேலூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் நடக்கும் ஈஷாவின் மஹாசிவராத்திரி விழாவில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் ஈஷா சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீக திருவிழாவான மஹாசிவராத்திரி விழா ஈஷா சார்பில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஈஷா மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது.

இதுதவிர, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுச்சேரி, சேலம், நாமக்கல், திருவாரூர், நாகர்கோவில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், திண்டுக்கல் உட்பட 32 இடங்களில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை isha.co/msrtn-ta என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கோவையில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா மற்ற எல்லா இடங்களிலும் பெரிய எல்.இ.டி தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்சபூத க்ரியாவுடன் தொடங்கும்.



லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைகட்ட உள்ளது.



தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர்வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் மாமேகான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.



இது தவிர, கேரளாவைச் சேர்ந்த ‘தெய்யம்’ நடன குழுவினர், கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள், ஜார்ஜியாவைச் சேர்ந்த நடன கலைஞர்களும் விழாவை ஆட்டம், பாட்டத்துடன் அதிர செய்ய உள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...