திருப்பூரில் 2 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை - இருவரை அழைத்துச் சென்று விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த ஆண்டு ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூரில் இருவேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இருவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.



திருப்பூர்: மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூரில் இருவேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகருக்குட்பட்ட ராம் காலனி மற்றும் நல்லூர் மண்டலத்திற்குட்பட்ட சிறுநகர் உள்ளிட்ட இருவேறு இடங்களில் என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.



ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் இருவர் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் சோதனை முடிவில் ராம் காலனியில் உள்ள முகமது ரிஸ்வான் மற்றும் நல்லூர் சிறுநகரைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா ஆகிய இருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.



கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்காக இருவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...