கோவை பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை - நெல்லை இளைஞர் கைது!

நெல்லை மாவட்டம், செண்பகராமன் நல்லூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர், கோவையை சேர்ந்த 25 வயது பெண்ணின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.


கோவை: நெல்லை மாவட்டம் செண்பகராமன் நல்லூர் பகுதியை சேர்நதவர் மணிகண்டன் (வயது31).



இவர் கேரள மாநிலம் மலப்புரம் பேக்கிரியில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் ஜஸ்டின் என்ற பெயரில் கணக்கை ஆரம்பித்திருக்கின்றார்.

பின்னர், கோவையை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இருப்பினும், மணிகண்டன் ஜஸ்டின் என்ற பெயரிலேயே, அந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியிருக்கிறார்.

அப்போது அந்த பெண் தனது தனிப்பட்ட புகைப்படங்களை மணிகண்டனுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால், அந்த பெண் மணிகண்டனிடம் பேசாமல் இருந்து வந்தார்.

இதனால், ஆத்திரமுடனிருந்த மணிகண்டன் சமூக வலைத்தளத்தில் பல்வேறு போலி கணக்குகளை ஆரம்பித்து அந்த பெண்ணிற்கு தொடர்ந்து தொல்லை தந்திருக்கின்றான். மணிகண்டன் அந்த பெண்ணை பாலியல் தொழிலாளிபோல் சித்தரித்து Item Girl Coimbatore என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். தொடர்ந்து, அந்த பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, மணிகண்டன் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். முன் பின் தெரியாத நபர்களிடம் சமூக வலைதளங்களில் பெண்கள் தொடர்பில் இருக்க கூடாதென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...