சமூகவலைதளங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இறந்ததாக பதிவு - கோவையில் மீண்டும் போஸ்டர் யுத்தம்!

அதிமுக ஓ.பி.எஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் பரப்பிய ஈபிஎஸ் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோவையின் முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.



கோவை: கோவை பொய் தகவலை பரப்பிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கண்டித்து கோவை முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோஷ்டி மோதல் காரணமாக அதிமுக கட்சி தலைவர்கள் சிதறி பயணித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம், ஒ பன்னீர் செல்வம் மறுபுறம் அதிமுகவின் தலைமையின் நாற்காலிக்கு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவும் தன் பங்குக்கு விட்டு வைப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுக்கின்றன.



அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர் ஒருவர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி மறைந்து விட்டதாக தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றார்.

இதனை கண்டித்து ஓ.பி.எஸ் தரப்பினர், பொய் தகவலை பரப்பிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர்.



இதனிடையே கோவையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜாகிர் உசேன் என்பவர் புகழேந்தி இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வலைதளத்தில் பகிர்ந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி கோவையின் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நீதிமன்ற வளாகம், அரசாங்கக் கலைக் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம், குனியமுத்தூர், பீளமேடு என பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...