ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் ரூ.35 கோடி செலவு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் ஆணையரிடம் மனு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 40,000 வாக்காளர்கள் போலியாகச் சேர்த்து, திருமங்கலம் போல புதுபார்முலாவை திமுக கடைப்பிடித்து வருகின்றனர். தொகுதிக்கு பண விநியோகம் சீராக செல்வதற்காக, அருகே உள்ள மாவட்டங்களில் முதல்வர் முகாமிட்டு ஆய்வு செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் விதிமீறல்களில் ஈடுபடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் மனு அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பழனிகுமாரை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,



ஈரோடு கிழக்கு தொகுதிகளில் 30 அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை. வாக்கு சேகரிக்கிறேன் என்ற பெயரில் ஒட்டகம் மீது அமர்ந்து வாக்கு சேகரிப்பது, டீ, பஜ்ஜி மற்றும் வடை போட்டுக் கொடுத்து செய்த செயல்கள் அனைத்தும் கோமாளித்தனத்தின் உச்சக்கட்டமாக உள்ளது.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் நாட்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க, தொகுதியில் பந்தல் அமைத்து அவர்களுக்கு பணம், காய்கறிகள், இறைச்சி எனக் கொடுத்து வருகின்றனர். எனினும் மக்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு இந்த தேர்தலில் சவுக்கடி கொடுப்பார்கள்.

குறிப்பாக தேர்தல் விதிமுறைகளை மீறிதிமுக-வினர் சுமார் ரூ.35 கோடி வரை செலவுகள் செய்யப்பட்டதாகக்கூறி அதற்கான பட்டியலையும் வெளியிட்ட அவர், 40,000 வாக்காளர்கள் போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.திருமங்கலம் பார்முலா போன்ற, புது பார்முலாவை திமுக கடைப்பிடிப்பதாகவும், தொகுதிக்கு பண விநியோகம் சீராக செல்வதற்காக, அருகே உள்ள மாவட்டங்களில் முதல்வர் முகாமிட்டு ஆய்வு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.



தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுள்ள நிலையில் வேங்கைவயல் பகுதிக்கு முதலமைச்சர் செல்லாதது ஏன் எனவும், அவர் கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவினர் அனைவரும் காரில் கட்சி கொடி கட்டி வலம் வருகிறார்கள், பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள், இது சட்டப்படி விதிமீறல் ஆகும்.

தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் இயேசு கிறிஸ்துவின் படத்தைப் போட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட கடவுளை தேர்தல் பிரச்சாரத்தில் விளம்பரமாகப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி திமுக கூட்டணியினர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓபிஎஸ்-யை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...