தாராபுரத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைமட்டப் பாலப் பணிகள்! - பொதுமக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சகுனிபாளையத்தில் நடைபெற்றுவரும் தரைமட்டப் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சகுனிபாளையம் சாலையில் தரைமட்ட பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தொடர்ந்து சில மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால். இந்தச் சாலையை பயன்படுத்தும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இதேபோன்று இந்த சாலையை 20க்கும் மேற்பட்ட நகரவாசிகள் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல கிராமங்களில் இருந்து வரும் கிராமவாசிகள் இச்சாலையை கடந்து தாராபுரம் நகரப் பகுதிக்கு வருகின்றனர்.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், சகுனிபாளையம் சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தரைமட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...