திருப்பூரில் ராட்சத குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஓடி வீணாகிய நீர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கூட்டுக்குடிநீர்த் திட்ட ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை, சம்பவ இடத்திற்கு வந்து குழாய் உடைப்பை அதிகாரிகள் சரிசெய்து வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த மங்களம் சாலை வெங்கமேடு பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி சாலைகளில் ஓடியது. வெள்ளமாகப் பாய்ந்த தண்ணீரால் சாலைகளும் சேதமடைந்தன.



பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மக்களின் குடிநீர் தேவைக்கு 4வது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட ராட்சத குழாயில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...