கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு போதை ஆசாமிகள் அட்டூழியம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள திடலில் போதை ஆசாமிகள் மது அருந்துவதோடு, ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மதுபாட்டில்களை வைத்து விட்டு செல்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடல் உள்ளது. இந்த திடல் பகுதியில் இரவு நேரங்களில் கூடும் போதை ஆசாமிகள் அங்கேயே மது அருந்துவதோடு மட்டுமல்லாமல், குடித்து விட்டு மதுபாட்டில்களை ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு வைத்து விட்டு செல்கின்றனர்.

சிசிடிவி கேமராக்கள் இருந்தும், அதில் அவர்கள் செய்யும் காட்சிகள் பதிவானால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்ச உணர்வு இல்லாமல் தினந்தோறும் இப்படிச் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இப்படி சட்டவிரோத செயலில் ஈடுபடும் போதை ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...