உடுமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் - முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

உடுமலை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பேரவை கூட்டத்தில், காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டம், ஒன்றிய தலைவர் எலிசபெத் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி வழங்கும் பணியை சத்துணவு ஊழியர் பொறுப்பில் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் ஒன்றிய பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, ஒன்றிய துணைத் தலைவர் மாலதி, ஒன்றிய செயலாளர் ஆனந்தி, ஒன்றிய பொருளாளர் சகிலா பானு, ஒன்றிய இணைச் செயலாளர் சித்ரா, ஒன்றிய துணைத் தலைவர்கள் ராஜேஸ்வரி, கவிதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...