கோவை பேரூர் பட்டிஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா - விடிய விடிய சிறப்பு பூஜை!

கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.



கோவை: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மின்னொளியில் ஜொலித்தது.

இந்து அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 5 சிவாலயங்களில் சிவராத்திரியைச் சிறப்புப் பூஜை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வர் திருத்தலத்தில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய பக்தர்களின் பரவசம் விடிய விடிய நீடித்து இன்று காலை 6 மணி வரை தொடர்ந்தது.

சிவராத்திரி நிகழ்வில், இரவு 9 மணி முதல் 11 மணி வரை முதற்கால பூஜை, 11 மணி முதல் நள்ளிரவு 1மணி வரை இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு1 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் 4.30 நான்காம் கால பூஜை நடைபெற்றது.

சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசை, தவில் இசை, நாதஸ்வரம் இசைக்கப்பட்டன. மாலை 6.15 மணிக்கு கோவை மாவட்ட திருக்கோவில் ஓதுவார்கள் திருமுறை விண்ணப்பம் நடந்தன.

இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு குத்துவிளக்கேற்றி விழா ஆரம்பமானது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாலச் அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோர் ஆன்மிக அருளுரை வழங்கினார்.



இரவு 7.15 மணிக்கு வழுவூர் பழனியப்பன் குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும்.



இரவு 7.45 சிவகண வாத்திய குழுவினர் கயிலை வாத்தியமும் நடந்தது. இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் தலைமையில் பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் பெண்களா?, ஆண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

இரவு 9.30 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் கானா உலகநாதன், தஞ்சை நாட்டுப்புற பாடகி செல்வி, டி.வி.சண்முகம் வழங்கும் கோவை பிரியா இசைக்குழு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு 11.30 நண்பர்கள் கலைக்குழு ஸ்ரீதர் தலைமையில் வெங்கலம், பம்பை, காவடி, கை சிலம்பாட்ட கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது.



இரவு 12.30 மணிக்கு சென்னை சாய் நிருத்தியாலயா வழங்கும் அரணும், அங்கயற்கண்ணியும் நாட்டிய நாடகம், அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு சுசித்ரா குழுவின் பக்தி இன்னிசை, இரவு 2.30 மணிக்கு திருப்பூர் மூலனூர் சாந்தகுமாரின் மின்னல் கிராமியக் கலைக் குழு பறை இசை, தீ விளையாட்டு, அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை சூப்பர் சிங்கர் ராஜ கணபதி, சரத் சந்தோஷ், தீப்தி சுரேஷ், ஸ்ரீஷா பாட்டுக்கச்சேரி ஆகியன பேரூர் சாந்தலிங்க அடிகளார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.



சிவராத்திரி வழிபாட்டை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் தீப விளக்குகள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.



இந்த நிலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பட்டீஸ்வரர் கோயில் திருத்தலமே வண்ண விளக்கால் ஜொலித்தன.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...