உடுமலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு சத்துணவு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி ஆசிரம உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11ஆவது வாரமாக ரொட்டி, பால், முட்டை, பேரிச்சம்பழம், எள் உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சத்துணவு வழங்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11ஆவது வாரமாக சத்துணவு வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி, திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று 11ஆவது வாரம் காந்தி ஆசிரமம் உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.



இதில் ரொட்டி, பால், முட்டை, பேரிச்சம்பழம், எள் உருண்டை, இலந்தை வடை, கடலைமிட்டாய், வாழைப்பழம், அவித்த நிலக்கடலை, பாசிப்பயிர், பிஸ்கட், பொறி உருண்டை, இஞ்சி மிட்டாய் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தது.



இந்நிகழ்ச்சியில் உடுமலை நகர விஜய் ரசிகர் மக்கள் இயக்கம் நகர தலைவர் ராமன், நகர நிர்வாகிகள் அப்துல்லா காஜா, பிரபு, செந்தில், சந்திரன், நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...