தாராபுரத்தில் சீமானை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அண்ணா சாலை முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருவுருவப்படத்தை கிழித்து சேதப்படுத்தினர்.



மேலும், அவதூறாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சீமானுக்கு எதிராக கண்டன முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

தமிழ் புலிகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன் பேசுகையில், ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனாவை ஆதரித்து கட்சியின் தலைமை

ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த 13 ஆம் தேதி திருநகர் காலனியில் நடைபெற்றது.

அதில் பேசிய சீமான், அருந்ததியர் மக்களை இழிவுபடுத்திவிட்டார். எனவே, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும், என்றார்.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன், மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன், மாவட்ட செயலாளர் வடிவேல், வழக்கறிஞரணி செந்தில் குமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...