பொள்ளாச்சியில் சீமான் உருவபொம்மையை எரிக்க முயற்சி - தமிழ் புலிகள் கட்சியினர் கைது

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததிய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சீமான் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் கைது.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த 13 ஆம் தேதி திருநகர் காலனியில் நடைபெற்றது.



அதில் பேசிய சீமான், அருந்ததியர் மக்களை இழிவு படுத்தி பேசியதாக கூறி, பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை கொண்டு வந்து எரிக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்த போலீசார் உருவபொம்மையை பிடிங்கி தடுத்து நிறுத்தினர்.



தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய தமிழ் புலிகள் கட்சியினர், சீமானை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து காவலர் மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டம் காரணமாக கோவை-உடுமலை சாலை பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...