வால்பாறை சோலையாறு அணையின் நீர் மட்டம் சரிவு - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணைக்கு நீர்வரத்து 30 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 604 கனஅடியாகவும் உள்ளது. விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான சோலையாறு அணை 160 அடி உயரம் உள்ளது. அணையில் 5 டி.எம்.சி தண்ணீர் சேகரிக்கப்படும். இதில் அணையின் உபரி நீர் சேடல் வழியாக மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் 74 வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்பின் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று ஆழியார் அணை மற்றும் அமராவதி அணைக்கு தண்ணீர் செல்கிறது.



சோலையாறு அணை தண்ணீர் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. தற்போது, கோடைகாலம் என்பதால் மழை இல்லாமல் ஆற்றில் தண்ணீர் வற்றிபோய் காணப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது. தற்போது, அணைக்கு நீர்வரத்து 30 கன அடியாகவும், 5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 604 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.



இதனால், அணையில் தண்ணீர் வற்றிபோய் மண் திட்டுக்கள் காணப்படுகிறது. சோலையாறு அணை தண்ணீர் இல்லாமல் வரண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அணையின் நீர் மட்டம் சரிவால், விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...