கோவை - சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோயில் மாசித் திருவிழா

கோவை சொக்கம்புதூரில் மாசாணியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோவை: கோவை சொக்கம்புதூர் செல்லப்பாபுரம் பகுதியில் உள்ள மகாசக்தி மாசாணியம்மன் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மாசி மாதத்தை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, மகா சிவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவு மயான பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று சத்தி கரகம் அழைத்து வருதல் மற்றும் பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செய்தனர்.



அதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணியளவில் உச்சிக்கால பூஜை நடைபெற்ற மகாமுனி பூஜை மற்றும் அன்னதான நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த திருவிழா வருகின்ற 26ம் தேதி சிறப்பு அபிஷேக பூஜை உடன் முடிவடைகிறது.



இந்நிகழ்வில், கோவிலின் தர்மகர்த்தா லட்சுமி நாராயணன், பொருளாளர் ஆனந்தன், செயலாளர் துரைராஜ் உட்பட குடும்ப பெரியவர்கள் கிருஷ்ணன், கதிர்வேல், வேணுகோபால் மற்றும் அறங்காவலர்கள் பாலசுந்தரம், பழனிசாமி, மதனகோபால், உமா காந்தன், சுகுமார், செந்தில், ஜனார்த்தனன் மற்றும் கோவில் பூசாரிகள் சிவஞானம், சதீஷ்குமார், லோகசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...