உடுமலை நகராட்சி சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை நகராட்சி யுஎஸ்எஸ் காலனி பகுதியில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பூங்காவை மூக விரோதிகள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வருவதாக மக்கள் குற்றச்சாட்டு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு யுஎஸ்எஸ் காலனி பகுதியில் அனுஷம் நகர், பாரதியார் காலனி, மதியழகன் நகர் உட்பட பல்வேறு குடியிருப்புகளில் சுமார் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.



பொதுமக்களின் கோரிக்கை ஏற்று இப்பகுதியில் கலைஞர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா யூ.எஸ்.எஸ் காலனி பகுதியில் அமைக்க முடிவு செய்யபட்டது. அதன்படி சிறுவர் பூங்கா பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.



இதன் காரணமாக அப்பகுதி தற்போது, சமூக விரோதிகள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். மேலும் புதியதாக வாங்கிய விளையாட்டு உபகரணங்கள் சேதமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பல லட்சம் மதிப்பில் அமைக்கபட்ட சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...