மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி - தாராபுரம் அணி அசத்தல்

தாராபுரத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு நினைவுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அட்டவனை மஜித் பள்ளி கூடைப்பந்து மைதானத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைப்பெற்றது.



இதில் திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் பகுதிகளிலிருந்து சுமார் 11 அணிகள் கலந்து கொண்டன. அதில் முதல் பரிசை YMBA தாராபுரம் அணியினரும், இரண்டாம் பரிசை திருப்பூர் நஞ்சப்பாபள்ளி மாணவர்களும், முன்றாம் பரிசை யங்க்ஸ்டர் கொங்குநாடு தாராபுரம் அணியினரும் மற்றும் நான்காம் பரிசை பாண்டிய நாடு திருப்பூர் அணியினரும் பெற்றனர்.



வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக தேர்தெடுக்கப்பட்ட ஹரி என்பவருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...