'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்..!' - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சி அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், மக்களை ஆளும் கட்சியினர் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என்பதால், இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.



ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது,

ஈரோடு கிழக்கு தொகுதியில் 27 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. ஆனால் தேர்தலையொட்டி நடைபெறும் விஷயங்கள் ஜனநாயகத்துக்கு புறம்பாக உள்ளது.

இந்திய அரசியலில் கேள்விப்படாத அத்துமீறல்கள் இந்த இடைத்தேர்தலில் நடைபெறுகிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளுக்கு முன்பாக பந்தல் போட்டு அமர்ந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து சுதந்திரமாக வர முடியவில்லை.

மக்கள் ஆடு, மாடு, போல அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் விருப்பப்பட்ட கட்சிக்கு செல்ல விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். முறையான விசாரணை செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு தேவைப்பட்டால் நாங்களும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்.

ஆளுங்கட்சியினர் வெற்றி பெற வாய்ப்பு குறைவு. இது போன்ற செயல்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் மாறும். மற்ற அரசியல் கட்சியினர் வேறு தொகுதியில் இருந்து தான் மக்களை அழைத்து வந்து பேசுகின்றனர், அங்குள்ள மக்களிடம் பேச முடியவில்லை.

மத்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கவனிக்க வேண்டும். 2009 ஆண்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை கொன்று குவித்த பிறகு இலங்கை அரசுமக்களை அடைத்து வைத்தது போல இப்போது இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் செயல்படுகின்றனர்.

இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என்றால் முறைகேடுகள் நடைபெறுகிறது. ஜனநாயகம் இல்லாதது போல உள்ளது. இது பேராபத்துக்குமுன் உதாரணம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல. தேர்தல் ஆணையத்தினர் கண்ணைக்கட்டி உள்ளனர்.

ஜனநாயக வாதிகள் நீதிமன்றத்தை நாட வேண்டும். அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் தடுக்கிறார்கள். இதன் காரணமாக தேர்தலை நிறுத்த வேண்டும்.

அருந்ததியர் சமூகம் குறித்து சீமானின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த அவர், எங்கள் தளம் மாறிவிட்டது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...