உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி - தாராபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று தாராபுரம் நகர அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.



திருப்பூர்: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.



இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பால் அதிமுக எடப்பாடி பழனிசாமியின் வசமாகியுள்ளது.



உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, திருப்பூர் கிழக்கு மாவட்ட அதிமுகவினர் தாராபுரத்தில் அதிமுக பொருளாளர் சின்னப்பன் தலைமையில் ஆவின் துணைத் தலைவர் டி. எஸ்.சிவக்குமார் முன்னிலையில் அண்ணா சிலை, பெரியகடை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



அப்போது, எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு அதிமுகவினர் எடப்பாடியார் வாழ்க எடப்பாடியார் வாழ்க என முழக்கமிட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...