கோவையில் 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது

கோவை துடியலூர் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்களை ஒழிக்க தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் சரவணம்பட்டி- துடியலூர் சாலை ஆறுமுகம் ரைஸ் மில் அருகில் தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர், சோதனை மேற்கொண்டதில் சந்தேகப்படும்படியாக இரு மூட்டைகள் இருந்தன. காவல்துறையினர் அதனை திறந்து பார்த்தபோது கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்தவர்களை துடியலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.



அதில், அவர்கள் பீகாரை சேர்ந்த சந்தன்குமார்(வயது30) மற்றும் அன்ஹித்குமார்(வயது19) என்பதும், அதில் சந்தன்குமார் காளப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதும், அங்கு சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்ய எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.



இதனைத் தொடர்ந்து, சுமார் 7 லட்சம் மதிப்பிலான 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...